​​​மதங்களில் சிறைப்படாத ஆன்மிகம்

சிந்தனைத் துளிகள்

சகோதர, சகோதரிகளே வணக்கம்,


       தாங்கள் இறந்தவர்களை வணங்குபவராக இருப்பின் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். ஒவ்வொரு உடலிலும் ஒரு ஆத்மா உண்டு. இந்த உடல் அழிந்த பின்பும் ஆத்மா வாழ்கின்றது. நாம் காணாத கடவுளை வழிபடுவதை விட நம்மோடு வாழ்ந்து மறைத்த ஆத்மாக்களை வணங்குவது சாலச் சிறந்தது.

காணும் இயற்கையெல்லாம் இறைவனின் பிம்பங்களே.

இயற்கை எய்தியவர்கள் நம் தெய்வங்கள்.

இறைவன் ஆசீர்வாதம் என்பது எது?.
பிறந்தபோது நல்ல தாய் தந்தை கிடைப்பதே முதல் ஆசிர்வாதம். பாசமான சகோதர – சகோதரிகள், நேசமான உறவினர்கள், அன்பான மனைவி/கணவன். நல்ல குழந்தைகள், தூய நட்புகள் செய்த புண்ணிய பலன்களால் அமைகின்றது.

பூஜைகள் செய்தால்தான் பாவங்கள் நீங்குமா?
உப்பு தின்னவன் தண்ணி குடித்துத்தான் ஆக வேண்டும்,பாவம் செய்தவன் தண்டனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

        மயானம் ஒன்றில் ஞானம் 

பெற்ற நான், பெற்ற 

ஞானத்தை  "குருவம்சம்" ஆக விளக்குகின்றேன். ஜனனம்- மரணத்திற்கு  இடைப்பட்டதே மனித  வாழ்க்கை.  ஜனனத்திற்கு முன்பும் மரணத்திற்குப் பின்பும் ஆத்ம வாழ்க்கைமனித வாழ்வில் மட்டுமே புண்ணியம் சேர்த்துக் கொள்ள முடியும். இதற்கு மதம், ஜாதி தேவையில்லை.இதனையே குருவம்சம் வலியுறுத்துகின்றது.

குருவம்சம்-வரலாற்றுப் பாதை


முன்னுரை

​​மறுஜென்மம் உண்டா?
முதல் பிறவி என்றால் அனைவரும் சமமாக பிறந்து இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பல வேறுபாடுகள். இப்போது பிறந்து இருப்பதும் மறு ஜென்மம்தான். பிறவிகள்  அவரவர் கர்மாக்களை பொருத்தது.
 

இறைவனை வணங்கலாமா?
இறைவனை பார்த்தபின் வணங்கலாம்நேரில் பார்க்காதவரை வணங்குவதால் பயன்யில்லை.
ஒழுக்கம் – நீதி – தர்மம் கொண்டு வாழ்வதே உண்மை இறை வழிபாடு
.

         நல்லவர்களாக இருக்க சாமி  தேவையில்லை.சாமி கும்பிட மதம் தேவையில்லை. ஒவ்வொருவரும் இறைவனைப் பற்றி தனித்தனியாக சிந்திப்பதே சுதந்திரமான ஆன்மிகம் ஆகும். சிறுவர்களுக்கு ஆன்மிகம் தேவையில்லை. உணவு, உடை,கல்வி, கொடுத்து ஒழுக்க நெறியுடன் வாழ கற்று கொடுத்தாள் போதுமானது. உலகம் நிலையில்லாததுஎல்லாம் மாயை என்று போதித்து இளம்வயதில் அவர்கள் அறிவை தடைபடுத்தக் கூடாது. வாலிப வயதில் சிந்தனை செய்து ஆன்மிகம் தேடிக்கொள்ள வேண்டும்

       ஒழுக்கம் – நீதி – தர்மம் கொண்டு வாழ்வதே உண்மையான  இறைவழிபாடு. வாழ்க்கை முழுவதும் மனம்போல் தவறாக வாழ்ந்துவிட்டு, முதுமையில் ஆன்மிகத்தை தேடுவதில் 

அர்த்தமில்லைமத கோட்பாடுகளிருந்து வெளியேறி சுயசிந்தனையில் உண்மையான  இறை உலகம் காணவாரீர்.

பாவங்களில் இருந்து விடுதலைப் பெறுவது எவ்வாறு?
மிகவறட்சியான பாலைவனத்தைத் தனிமையில் ஒருவன் கடக்க நேர்ந்தால்,சுடு மணலில் தவிக்கும் போது காலுக்கு செருப்பும், குடையும், ஒரு துணையும் கிடைத்தால் பாலைவனம் கடக்க ஏதுவாக இருக்கும்.
புண்ணிய காரியங்கள் தொடர்ந்து செய்தால் பாவத்தில் தத்தளிக்கும் போது புண்ணியம் உதவியாக வந்து நிற்கும்.

GURUVAMSAM 

வாழ்க   குருவம்சம்